Published on 04/06/2022 | Edited on 04/06/2022

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடந்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த ஆய்வுக்கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்தியுள்ளார்.