Published on 07/02/2020 | Edited on 07/02/2020
சர்வதேச அளவிலான வாழைக் கருத்தரங்கம் மற்றும் வாழைக் கண்காட்சி, வரும், 22ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது.
![Chinese scientists banned from coming to Trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/3C5bpoIgQ0ciCUxAQFcKMy_M3k3ExtmMx-QH8If1oBo/1581078042/sites/default/files/inline-images/reyrtytyytyty.jpg)
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில் சர்வதேச அளவிலான, 300க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த கருத்தரங்கில், தெற்கு சீனாவில் இருந்து, 4 விஞ்ஞானிகள் பங்கேற்று, தங்கள் நாட்டின் வாழை ரகங்கள், சாகுபடி முறை, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், மேலாண்மை குறித்தெல்லாம் விளக்கமளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அவர்களுடைய வருகை தடைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடைய விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.