Published on 12/01/2020 | Edited on 12/01/2020
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15,16,17ம் தேதிகளில் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் அரசு பொது விடுமுறை நாள் என்பதால் கட்டண தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 17- ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார்கள் என்பதால், அன்றைய தினம் அரசினர் தோட்டம், டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரை வரை பயணிகளின் வசதிக்காக 'கேப்' (CAB)இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.