Skip to main content

சென்னையில் ஆண்களை ஓரினசேர்க்கைக்கு அழைத்து பணம் பறிக்கும் கும்பல் கைது!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
gay ss


ஆண்களை ஓரினசேர்க்கைக்கு அழைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு கும்பல் ஓரினசேர்க்கைக்கு ஆண்களை அழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விடுதிகளில் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் அறையில் இருந்து வாலிபர் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த தனியார் விடுதியில் தங்கி இருந்தவர்கள் ஒன்று கூடி அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அந்த அறையில் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி மற்றொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். இதில் அவர்கள் ஓரினசேர்க்கைக்கு ஆண்களை அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு மற்ற 4 பேரையும் அறையிலேயே சிறை வைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில்,

 

 

தூத்துக்குடியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 32). இவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஓரினசேர்க்கைக்கு விரும்பும் நபர்களை கண்டறிந்து அவர்களை அழைத்துவந்து விடுதியில் அறை எடுத்து தங்கி அந்த நபர்களை நிர்வாணமாக்குவார்.

அந்த நேரத்தில் அருகில் அறை எடுத்து தங்கியிருக்கும் அவரது கூட்டாளிகள் அந்த அறைக்குள் நுழைந்து செல்போனில் படம் எடுத்து மிரட்டி அந்த நபரிடம் இருக்கும் பணம், நகை போன்றவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர் மந்திரமூர்த்தி தனக்கு எதுவும் தெரியாததுபோல அந்த நபரை அனுப்பிவைத்துவிடுவார்.

இவர்கள் விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் பல வாலிபர்களை இதே போன்று மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மந்திரமூர்த்தி(32), மாரியப்பன்(30), முத்துராமலிங்கம் (32), இளையராஜா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஓரினச்சேர்க்கைக்கான பல வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர்.

சார்ந்த செய்திகள்