





Published on 06/05/2023 | Edited on 06/05/2023
சென்னை கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 140க்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை (06.05.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கோவில் குளத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.