கொரியா தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கிய விழா – 2020ஐ இணைய வழி கூடுதலாக சங்கத்தைச் சேர்ந்த பெண்களே ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக செல்வன் கவின் பாரதிராஜாவும் சர்வேஷ் பாரதிராஜாவும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். நிகழ்வின் நோக்கம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் சத்யா மோகன்தாஸ் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசான் குழந்தைகள் நேயப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசானை அறிமுகம் செய்து சரண்யா பாரதிராஜா பேசினார்.
தமிழ் ஆசான் சிறப்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதித் ஐசக், க.தட்சினா பாலன், தக்ஷாரா, வர்ஷா, மகிழன், எமிலி யாசின், தியா மற்றும் நிலா, ரோஷித் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
கலை இலக்கிய சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் ஆசான் அவர்கள், தாய்மொழியில் கல்வி கற்றலின் முக்கியத்துவத்தினையும், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் செய்யக்கூடிய விடயங்களையும் நமது மக்களிடையே பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை சரண்யா பாரதிராஜா, முனைவர் சத்யா மோகன்தாஸ், சரண்யா ஆனந்தகுமார், விஜயலெட்சுமி பத்மநாபன், முனைவர் கிறிஸ்டி காத்தரின் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.