Published on 21/07/2019 | Edited on 21/07/2019
சென்னையில் பல்வேரு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக தாம்பரம், அடையாறு, கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், வில்லிவாக்கம், கொளத்தூர், ராயப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, போரூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தாம்பரம், அதன் சுற்று வட்டார பகுதியில் அரை மணிநேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் மழையால் சென்னை மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.