Skip to main content

"சென்னை, செங்கல்பட்டில் அதிகனமழை பெய்யக்கூடும்"- வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பேட்டி!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

"Chennai, Chengalpattu may receive heavy rains" - Interview with the Director of the Meteorological Center!

 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், "வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னையில் இருந்து 430 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 420 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 

 

காரைக்கால்- ஸ்ரீஹரி கோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே தாழ்வு மண்டலம் நாளை (11/11/2021) கரையைக் கடக்கும். நாளை (11/11/2021) மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகி விடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும். இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யக்கூடும். கடலூர், புதுச்சேரிக்கு அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 5 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்; அதிமுக போராட்டம் அறிவிப்பு! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
ADMK struggle announcement for New laws brought into force 

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில், “புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், இந்த 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (05.7.2024) நண்பகல் 12 மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மழைநீருடன் தேங்கிய கழிவுநீர் - பொதுமக்கள் தர்ணா

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Stagnant sewage with rainwater - Public dharna

தமிழகத்தில் ஜூலை 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து தேங்கிய நீர் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

புளியந்தோப்பு பகுதியில் டிகாஸ்டர் சாலை, பாடிசன் சந்து உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரில் கலந்து முழங்கால் அளவிற்கு தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் பெண்கள் தவித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.