Published on 11/11/2020 | Edited on 11/11/2020
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டது.
கரோனாவால் மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா, 7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வண்டலூர் பூங்காவில் அனுமதியில்லை. மாஸ்க், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுடன் வண்டலூர் பூங்கா காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்கும். பூங்காவின் நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 75 லிருந்து ரூபாய் 90 ஆகவும், சிறுவர்களுக்கு ரூபாய் 35- லிருந்து ரூபாய் 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.