Published on 20/05/2022 | Edited on 20/05/2022
மழை காரணமாக சந்தையில் தக்காளி விலை உயர்வதைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ததால் வரத்து குறைந்து தக்காளி விலை வெளிச்சந்தையில் 90 ரூபாய் முதல் 120 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ரூ.70 முதல் 85வரை விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வெளிச்சந்தையில் தக்காளி விலை குறையும்வரை கூட்டுறவுத்துறை நடத்தும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்படவுள்ளது.