Published on 23/08/2021 | Edited on 23/08/2021
![kl](http://image.nakkheeran.in/cdn/farfuture/rnqSuUPN6oRB66lGzG_VThpTxBLyc80fGCkvU_ZuW3E/1629710406/sites/default/files/inline-images/rain%20hggh_31.jpg)
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.