![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/FnQdculjfFa6MFyeR1lpyB58qTXrOGkGkiO57jhdoTc/1677818306/sites/default/files/inline-images/n223806.jpg)
சென்னையில் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மாற்று வழித்தடத்தில் இயங்கக்கூடிய மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள மெட்ரோ நிர்வாகம், அதேபோல் அரசினர் தோட்டம் வழியாக ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மெட்ரோ பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோளாறை சரி செய்ய ஏழு பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு பணியாற்றி வருவதாகவும், ஒரு மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ சேவை தொடங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.