திருச்சியில் உள்ள தெற்கு ரயில்வே கூட்டுறவு கடன் சங்கம் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் மூலம் பிடித்தம் செய்து அதை வங்கி கணக்குகளில் சேமிக்கப்பட்டு அதன் மூலம் தொழிலாளர்களின் அவசர தேவைக்கு கடன்களை கொடுக்கும் நிறுவனமாக மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த சங்கத்திற்கு என்று திருச்சியில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், மற்றும் பெரிய கட்டிடங்கள் உள்ளடக்கிய நிலப்பரப்பு திருச்சியில் ஜங்சன் அரிஸ்டோ வலைவு அருகில் உள்ளது. இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஓரு முறை நடைபெற்று வந்தது. பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஓரு முறை என்று மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சங்கத்தை SRMU தொழிற்சங்கம் தான் கடந்த 1993 ம் ஆண்டு முதல் தன்னுடைய கட்டுபாட்டில் உள்ளது. இதன் தலைவராக வீரசேகரன், மேலாண்மை இயக்குநராக ராமலிங்கம் இருந்து வருகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு DRMU சங்கத்தின் சார்பில் இந்த கூட்டுறவு சங்கத்தில் 400 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் புகார் கொடுத்தனர். இதை அடுத்து தெற்கு ரயில்வேயில் உள்ள மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம் தொடர்ச்சியாக புகார் கொடுத்தன. இந்த புகாரின் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சி.பி.ஐ. விசாரணை நடத்த ரயில்வே வாரியம் சார்பில் பரிந்துரை செய்ததது. இதன் அடிப்படையில் கண்ணையன், வீரசேகரன், ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இது குறித்து மற்ற ரயில்வே ஊழியர் சங்கத்தினர் இந்த சங்கம் 1993ம் ஆண்டு முன்பு வரை 66 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது இந்த சங்கத்தில் வேலை செய்தவர்கள் 205 பேர் மட்டுமே. தற்போது இந்த சங்கத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இந்த சங்கத்தில் இருந்து தங்களை விடுவிடுத்து கொண்டனர். தற்போது இந்த சங்கத்தில் 33 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் இதில் 355 ஊழியர்கள் இந்த சங்கத்தில் பணியாற்றுகிறார்கள். இங்கே வேலை பார்க்கும் ஒவ்வொரு பணிக்கும் தலா 15 இலட்சம் முதல் 25 இலட்சம் வரை இலஞ்சம் கொடுத்து தான் வேலைக்கு சேர்ந்தனர். இவை அனைத்தும் ஆவணமாக தயார் படுத்தி இதை எல்லாம் புகார் மனுக்களாக கொடுத்திருக்கிறோம். இது சமீபத்திய ரயில்வே ஊழியர்களிடம் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஊழல் இந்த புகார் மனு 200 பக்கங்களில் கொடுத்து இருக்கிறோம் என்றார்.
கடந்த சில வருடங்களாகவே இந்த சங்கத்தின் மீது அவ்வப்போது இதே போன்ற குற்றசாட்டுகள் வெளிவந்தாலும் தற்போது தான் விசாரணைக்கு உத்தரவிட்டுயிருப்பது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.