Skip to main content

தமிழகத்துக்கு நீர்திறப்பு 72,855 கனஅடியாக உயர்வு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

cauvery water increase mettur dam water level raised

 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 72,855 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 43,272 கனஅடியாகவும், கபினி அணையிலிருந்து 29,583 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இன்று (22/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.45 அடியாகவும், நீர்இருப்பு 54.32 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்