மத்திய அரசு வருகின்ற 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நம்மை நாமே திருப்திபடச்செய்யுமே தவிர இதை பிரதமர் எந்தவகையிலும் கருத்தில் கொள்ளமாட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஒன்று சேர்ந்து டெல்லி சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்.
மேலும் மத்திய அரசுவரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விவசாய அமைப்புகள் நடத்தும் தொடர் இரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினார்.
- சுந்தரபாண்டியன்