கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். நகர்க்குழு உறுப்பினர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நடைபெற இருக்கும் தேர்தல் போராட்டத்தில் மோடி கஜானவை தமிழகத்தில் இறக்கி வெற்றிபெற்றுவிடலாம் என்று அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுவதும் தாமரை கருகி வருகிறது. இந்தநிலையில் அதிமுக பாமகவை வைத்துகொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்று தமிழிசை பேசிவருகிறார்.
![k.balakrishnan cpi m](http://image.nakkheeran.in/cdn/farfuture/VnD9lRx8anYtrtrxTxVsontiZw49iqpXTQeV4Ic3aIk/1551283944/sites/default/files/inline-images/cpim_1.jpg)
மோடி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை. சிலை வைக்க ரூ 3 ஆயிரம் கோடி செலவு செய்த மோடி தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய 12 மாவட்டங்களுக்கு ரூ 300 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார். இந்த மக்கள் வீடுகளை இழந்து நிற்கும் போது அவர்களை பார்க்க 10 நிமிடத்தை ஒதுக்காத மோடி, சாமியார் சிலை திறப்பதற்கு 3 மணிநேரம் காத்திருந்து அவருடன் சேர்ந்து ஆட்டம் ஆடுகிறார். 11 எம்எல்ஏக்கள் வழக்கில தீர்ப்பு வந்துவிட்டால் எடப்பாடி முதல்வராக நீடிக்க முடியாது. அதனால் பாஜக மோசமான நிலையை எடுத்து மிரட்டி வருகிறது.
மோடி ஆட்சி பொறுபேற்றதிலிருந்து 1920 மத கலவரம் நடைபெற்றுள்ளது. இதில் 363 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 163 கலவரங்கள் நடத்தப்பட்டு 63 பேரை கொலை செய்துள்ளனர். சிறுபான்மை, பெருபான்மை மக்களிடம் சாதி, மத அடிப்படையில் கலவரங்களை துண்டிவிட்டதே மோடி ஆட்சியின் சாதனை.
மோடி விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட எந்த வாக்குறிதிகளும் நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பன்பாடு கலாச்சாரத்தை மோடி அரசு சீரழிக்கும் வேலையில் செய்து வருகிறது. தமிழை அழிக்கும் கட்சியுடன் தமிழ், தமிழ் என்று கூப்பாடு போட்ட பாமக கூட்டணி வைத்துள்ளது. குடும்பத்தை வலுபடுத்தவே கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ். இது சந்தர்ப்பவாத கூட்டணி.
அன்புமணி முதல் கையெழுத்தை டாஸ்மார்க் கடைக்கு அருகில் மாங்கா உறுகாய் கடை வைக்க போட போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை நிருபிக்கும் வகையில் தற்போது கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மோடியின் அராஜகபோக்கை கண்டித்து திமுக வுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.