Skip to main content

காவிரி விவகாரம்: தமிழகம் முழுவதும் ஏப்.2ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதம்!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 2ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 


காவிரி நீர் பங்கீடை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில், மதுரையில் அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அறப்போராக சட்டஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் காலை 9மணி முதல் மாலை 6மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் நடைபெறும். தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியின் உரிமையை அதிமுக ஒருநாளும் விட்டுக்கொடுக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்