தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருக்கிறார். இவரை மாற்றி வானதி சீனிவாசனை மாநில தலைவராக்க பொன்.ராதாகிருணன் முயற்சி மேற்கொண்டார். அப்பொழுது வானதி சீனிவாசன் தம்பி ஒரு அமெரிக்க கம்பெனியுடன் சேர்ந்து சீட்டிங் வேலை செய்ததாக தமிழிசை சார்பில் புகார்கள் தட்டிவிடப்பட்டது.
அதனால் அமித் ஷா கடைசி கட்டத்தில் வானதி சீனிவாசனை தலைவராக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தனது தேவையற்றப் பேச்சுக்களால் மீம்ஸ்களில் மாட்டித் தவிக்கும் தமிழிசைக்கு பதிலாக பண்பட்ட பேச்சாளாரான வானதி சீனிவாசனை தலைவர் பதவிக்கு கொண்டு வரலாம் என மறுபடியும் பாஜக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளார் பொன்.ராதாகிருணன்.
அத்துடன் நிற்காமல் அதிமுக - பாஜக கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் உறுதியாக வெற்றி பெறும் வாய்ப்புள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியை வானதி சீனிவாசன் போட்டியிட எடப்பாடியிடம் பேசி வருகிறாராம்.