Published on 14/12/2021 | Edited on 14/12/2021
சினிமாவுக்கு சாதி, மதம் போன்ற வேறுபாடுகள் எப்போதும் கிடையாது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் சாதி, மதம் சார்ந்த சர்ச்சைகளுக்கு அவருக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அதில், "உள்ளூரில் குப்பம் மற்றும் மழை நீரில் வராத கரோனா, அமெரிக்கா, துபாய் போன்ற விமான நிலையங்களிலிருந்து தொற்றிவிட்டது. சினிமாவில் சாதி, மதம் கிடையாது. விளக்கை அணைத்தால் சாதி தானாகவே காணாமல் போய்விடும். எனவே சாதி, மதம் சார்ந்த பிரச்சனைகளை சினிமாவுக்குள்ளும், சமூகத்திலும் நாம் புறம்தள்ளும் முதல் ஆளாக இருக்க வேண்டும்" என்றார்.