Skip to main content

முதலுதவி செய்த சினிமா பாடலாசிரியர் மீது கொலை வழக்கு...விசாரணையில் திடீர் திருப்பம்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக போலீசாரிடம் கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கைது செய்தனர். போலீசார் அங்கு வருவதற்கு முன்பே அந்த நபர் பொதுமக்களால் தாக்கப்பட்டிருந்தார்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை அழைத்துச் சென்று விசாரித்த பொழுது ''தான் கொலை செய்யவில்லை'' என்ற வார்த்தைகளை அவர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அதனையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் கைது செய்யப்பட்ட அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல் இருந்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கலாமா அல்லது மனநலம் காப்பகத்துக்கு அனுப்பலாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் போலீசார்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு கைதான நபரின் படத்தை பார்த்த எழுத்தாளர்கள்  சிலர் காவல் நிலையத்திற்கு வந்து கைதானவருக்கு ஆதரவாக பேச தொடங்கினார். விசாரித்த பொழுது தான் அவர்  பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜெபிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடி குழு, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா. திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளரான ஜெ பிரான்சிஸ் கிருபா ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் புதினங்கள்,கட்டுரைகள், கவிதைகள் என இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளில் நடந்ததது தெளிவாக இல்லாததால் கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை பற்றிய அறிக்கை கிடைத்த பிறகு தான் இந்த வழக்கில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகே பிரான்சிஸ் கிருபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

 

 

இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிதிப் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீதான கொலை வழக்கை நீக்கி இயற்கை மரணம் என்ற  174  சட்டப் பிரிவில் வழக்கு பதிந்து கவிஞர் பிரான்சிஸ் கிருபாவை விடுவித்தனர்.

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

 

 

Murder case on cinematic songwriter made first aid ... A sudden turn back at trial

 

பைரி என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் அதற்காக தாடியுடன் தலையில் நீண்ட முடி வளர்த்து வந்தார். சென்னை கேகே நகரில் தங்கியுள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயம்பேட்டில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு காய்கறி சந்தையில் நிழலுக்கு ஒதுங்கியுள்ளார் அப்போது அந்த வழியாக வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட அவரை கைகளால் தாங்கி பிடித்துள்ளார். தனது மடியில் கிடத்தி மூச்சுத்திணறலை சரி  செய்ய தனது இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்து அழுத்தி முதல் உதவி செய்துள்ளார். இருப்பினும் பலனளிக்காமல் வடமாநில இளைஞர் விழுந்தார். ஆனால் இது  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு பிரான்சிஸ் கிருபா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கருதி அவரைத் தாக்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்