
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன்(31). இவா் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியின் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், இரவு உறங்க சென்றுள்ளார். நேற்று அவருடைய அண்ணன் மோகன்ராஜ்(36), லட்சுமி நாராயணனுக்கு பலமுறை செல்போன் மூலம் அழைத்தும் அவா் போனை எடுக்காமல் இருந்ததால், மோகன்ராஜின் தம்பி சீனிவாசன் என்பவா் லட்சுமி நாராயணனின் படுக்கையறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது லட்சுமி நாராயணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து அவரது சகோதரா் மோகன்ராஜ் மணப்பாறை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.