Published on 21/02/2018 | Edited on 21/02/2018

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சந்திப்பில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் கல்லூரிக்கு செல்ல பேருந்து இல்லாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் அரசு கல்லூரிக்கு கல்லூரி நேரத்தில் மாணவ மாணவிகள் செல்லுமா அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.