Published on 23/08/2021 | Edited on 23/08/2021
![hj](http://image.nakkheeran.in/cdn/farfuture/3R1EwUhIq7RsCBFtBM-Vw_ryQNprr1HbvWhmHy8OhRg/1629682700/sites/default/files/inline-images/bus_31.jpg)
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்றுமுதல் (23.08.2021) அமலுக்கு வந்த நிலையில், ஓசூரில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. கரோனா காரணமாக நீண்ட நாட்களாக அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்துக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.