காவேரி மருத்துவமனையில் கலைஞர் என்ற செய்தி கேட்டவுடனே டீகடைகள் முதல் ஒட்டு மொத்த வியாபாரிகளும் கடைகளை அடைத்து கலைஞருக்கு வருத்தம் தெரிவித்து வந்தனர் அதுபோல் திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் கலைஞர் படத்தை வைத்து மாலை மரியாதை திண்டுக்கல். தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வார்டுகள் ஒன்றியம் பகுதிகளில் கட்சிகாரர்கள் கலைஞர் படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
ஆனால் சில பகுதிகளில் அங்கங்கே பஸ்கள் ஒடி கொண்டு இருந்தனர்.அதுபோல் தான் பழனியிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சை கணக்கப்பட்டி அருகே ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி பஸ் கண்ணாடியை உடைத்தும் கல்லை விட்டு எரிந்து விட்டும் சென்றனர்.இந்த விஷயம் காட்டு தீபோல் பரவவே தனியார் பஸ்கள் முதல் அரசு பஸ்கள் வரைஉடனடியாக அங்கங்கே நிறுத்தினார்கள் அதுபோல் கேரளாவிலிருந்து கம்பம். தேனி வரும் 20 பஸ்களும் உடனடியாக நிறுத்தப்பட்டது அதுபோல் தேனி.திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் 100நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பஸ்களும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என பழனி.திண்டுக்கல்.தேனி.கம்பம்.போடி உள்பட சில பகுதிகளில் கட்சிகாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கங்கே பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது .