!["Build houses for middle class people" - Chief Minister MK Stalin's promise!](http://image.nakkheeran.in/cdn/farfuture/chUbUOQMgNCaY8RJN7roOPeovU0HGH4pEp_bGIfPoOQ/1639413728/sites/default/files/inline-images/mksa43434.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/12/2021) சென்னையில் நடைபெற்ற கிரடாய் (Confederation Of Real Estate Developers Association Of India- 'CREDAI')அமைப்பின் இரண்டு நாள் மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவது கனவாகி வருவதால், அவர்களுக்கு ஏற்ற வீடு கட்டி விற்க வேண்டும். விண்ணப்பித்த 60 நாளில் மனைகள், மனை பிரிவுக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் அனுமதி தர உள்ளோம். ஒரு நாடு வளர்ந்து வருவதை வெளிப்படையாகக் காட்டுவது கட்டுமானம் தான். 2031- ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமானத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., கிரடாய் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.ராம் ரெட்டி, கிரடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷன், துணை தலைவர் எம்.ஆனந்த், பொருளாளர் பி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.