Skip to main content

அதிமுக வேட்பாளர் யார்? - முதல்வர் பழனிச்சாமி பதில்

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
e

 

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.  இடையடுத்து இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

 

மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில்   தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் யார் என்ற அறிய கட்சியினர் கட்சி அலுவலகம் வாசலில் கூடியிருந்தனர்.

 

ஆனால், நேர்காணலுக்கு பின்னர் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  ‘’தேர்தலை சந்திக்க அதிமுக தயார்.  திருவாரூர் தேர்தலை சந்திக்க அச்சமில்லை.  எந்த தேர்தலை கண்டும் அதிமுக அச்சப்படாது.   திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்.  வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அஞ்சுகிறோம் என்ற அர்த்தமில்லை.  அதிமுக வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

Next Story

“அதிமுக கட்சி பிளவுக்கு காரணம்; தினகரனிடம் கெஞ்சிய எடப்பாடி” - கவிஞர் கண்ணன்ஜி

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Kavingar Kannanji  interview

 

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கவிஞர் கண்ணன்ஜி பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் கூறியதாவது: “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் தோற்பதற்கு அமமுக காரணமாக இருந்துள்ளது. அதிமுகவில் எந்தப் பிளவும் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். எடப்பாடி பழனிசாமி தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். குழப்பங்கள் அனைத்தையும் நீக்கி கழகத்தை வலுவாக்க ஓபிஎஸ் எடுத்துள்ள முயற்சிதான் இந்த சந்திப்பு. இது சாதிக்கான சந்திப்பு அல்ல. சாதிப்பதற்கான சந்திப்பு. 

 

ஜெயக்குமார் ஒரு அரசியல் பபூன். காமெடி பீஸ். அவர் இந்த சந்திப்பை விமர்சிக்கிறார். மோசமான நபரான ஜெயக்குமார் விமர்சிப்பது தெருவில் குரைப்பது போன்றது தான். கட்சியின் நலனுக்காக நாங்கள் பழசை மறந்துவிட்டு ஒன்றாக இணைந்துள்ளோம். பதவியிழந்த ஜெயக்குமாருக்கு பதவியை வழங்கியவர் சின்னம்மா. எடப்பாடியை முதலமைச்சராக்கியவர் சின்னம்மா. "இப்போது நான் தான் முதலமைச்சர் என்று அறிவித்தால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கையெழுத்து வாங்கிய பிறகு அறிவியுங்கள்" என்று டிடிவி தினகரனிடம் கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி. 

 

இவர்கள் நடத்துவது கட்சி அல்ல, கம்பெனி. இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை வரப்போகிறது. துரோகம் செய்பவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். கட்சி நிச்சயம் மீட்கப்படும். சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான். எடப்பாடி பழனிசாமியின் மகன் ஹோட்டலில் யார் யாரை சந்தித்தார் என்பது தெரியும். கே.பி.முனுசாமி அமைச்சர் துரைமுருகனோடு தொடர்பு வைத்துள்ளார். கோடநாடு வழக்கு பற்றி பேசினாலே நடுங்குகிறார் பழனிசாமி. நேரடியாக ஒருவரை சந்திப்பது என்பது மனிதப் பண்பு. 

 

ஆர்.பி.உதயகுமார் போல் ஒரு பச்சோந்தியை எங்குமே பார்க்க முடியாது. சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று மொட்டையடித்தவர் உதயகுமார். இந்தக் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே உதயகுமார் தான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிப்பது உதயகுமாரின் வழக்கம். அவருக்கான பாடம் விரைவில் கிடைக்கும். அதிமுகவை மீட்டெடுப்பதற்கு ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மிக முக்கியம். எட்டப்பனுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு செயல்படும் பழனிசாமி போன்றவர்கள் அதிமுக எனும் பாலில் விழுந்த விஷம். அந்த விஷத்தை நீக்கி அதிமுகவை வெற்றிபெற வைப்பது தான் நோக்கம். அதற்கான பணியை ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார்.”