கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அரசும் முயன்ற உதவிகளை செய்து வருகிறது அதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளவுக்கு மருத்துவ பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள வர்த்தகசங்கம்,ரோட்டரிகிளப், லயன்ஸ்கிளப் மற்றும் தன்னார்வ தொண்டுஅமைப்புகள் மூலமாக 25 லட்சம் மதிப்புடைய அரசி, பருப்பு, எண்ணெய், குடிதண்ணீர் பாட்டில்கள்,குழந்தைகளுக்கு பால்பவடர், கம்பிள, வேஷ்டி, சுடிதர், துண்டு, தட்டு, பிஸ்கட், பேனா, பென்சில், பிஸ்கட், குளுகோஸ்,சேலை உள்பட நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டது. இதில் பிரபல சாகர் மெடிக்கல் சார்பில் 5 லட்சத்திற்கான காசோலையே மாவட்ட கலெக்டர் வினையிடம் வழங்கினார்.
இந்த அத்தியாவசிய பொருட்களை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நான்கு லாரிகளில் கேரளாவுக்கு ஏற்பட்டது அதை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் வினைய் ஆகியோர் கொடி அசைத்து அந்த வாகனங்களை கேரளாவுக்கு அனுப்பிவைத்தனர்.