Published on 29/06/2018 | Edited on 29/06/2018

ஏழு ஆண்டுகளாக கட்டி முடிக்காத அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலத்தை
திறக்க கோரி வி.சிக்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் பணி 7 ஆண்டுகளாக கட்டி முடிக்காமல் இருப்பதால் பொது மக்கள் அனைவரும் பெரிய அளவில் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
பாலத்தை கட்டி முடிக்காமல் இழுத்தடித்து வரும் புதுச்சேரி அரசை கண்டித்து மூலக்குளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி மாநில அமைப்பாளர் தேவ.பொழிலன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.