Published on 11/11/2018 | Edited on 11/11/2018
திருப்பத்தூரில் பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க 200 முதல் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் லஞ்சம் வாங்கும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் புதூர்நாடு என்ற மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக உள்ளவர் மனோகரன். இவர் அங்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கேட்டு வருபவர்களிடம் 200 முதல் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வாங்க வந்தவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.