Published on 05/05/2022 | Edited on 05/05/2022

வங்கி ஏடிஎம்மில் இருந்து ரூபாய் 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பெருமாள்கோவில்மேட்டில் உள்ள வங்கி ஏடிஎம்மில் இருந்து ரூபாய் 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மோப்ப நாய்களைத் திசைத் திருப்பும் நோக்கில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றிருக்கிறார்கள். மேலும், சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர்.
காவலாளி இல்லாத ஏடிஎம்-யில் நடந்த இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.