Skip to main content

சிறுமியின் உயிரைப் பறித்த பாட்டில் பழரசம்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
The bottle of fruit juice that took the life of the girl; Food Safety Review

திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவியாஸ்ரீ என்ற சிறுமி கடைகளில் சிறிய ரக பாட்டிலில் வைத்து அடைத்து விற்கப்படும் பழரச குளிர் பானத்தை வாங்கி குடித்துள்ளார்.இந்நிலையில் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிறுமி காவியாஸ்ரீ உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் உயிரிழப்புக்கு பழரசம் தான் காரணம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பழரசம் தயாரிக்கும் நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பழரச பானம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அங்கு தயாரிக்கப்படும் ஆப்பிள், மாம்பழம் உள்ளிட்ட பழரச குளிர்பானங்களின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்