Published on 02/08/2021 | Edited on 02/08/2021

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டவரும், பாஜக வணிக பிரிவின் துணை தலைவருமான தணிகைவேல் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தணிகைவேல் பெயரும் அடிப்பட்ட நிலையில் பாஜக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.