Skip to main content

திருச்சியில் திடீர் என முளைத்த புத்த சிலை - அகற்றிய பெல் தொழிற்சாலை நிர்வாகம் !

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
b

 

திருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற கோயில்கள் வளாகத்தில் இருப்பது போல் சிலை வைத்த இடத்தில் புத்தர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என புத்த மதத்திற்கு மாறிய தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களுடன் .முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

பெல் வளாகத்தில் சக்தி கோயில் அருகே திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை மூன்றரை அடி உயர கல்லாலான புத்தரின் சிலை திடீரென வைக்கப்பட்டது. இதனை பெல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வைத்தனர்.

 

bh

 

இந்த சங்கத்தின் ஊழியர்களில் 50 பேர் புத்த மதத்திற்கு மாறியவர்கள். பெல் வளாகத்தில் மற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளது போல் புத்தருக்கு கோயில் கட்ட இடம் ஒதுக்குமாறு பெல் நிறுவனத்திடம் அனுமதி கேட்டனர்.

 

அனுமதி கொடுக்க மறுத்ததால் மகாபோதி புத்த சங்கம் ஆதரவுடன் புத்தர் சிலையை வைத்து விட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

புத்தர் சிலையை வைத்த தொழிலாளர்கள் தரப்பினர் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் சிலை அகற்றப்படலாம் என்ற தகவலால் தொழிலாளர்களும் விடிய விடிய காத்திருந்ததால் பெல் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 

 

இதற்கிடையே பெல் வளாகத்திற்குள் எந்த கோயில்களும் கட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் இதுவரை வழங்கியதில்லை. தற்போது வளாகத்திற்குள் உள்ள சில கோயில்கள் பெல் வருவதற்கு முன்பே இருந்தவை. மற்ற கோயில்கள் வளாகத்தை ஒட்டிய உள்ளாட்சி எல்கைகளில் அமைந்துள்ளன என பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் தீடீர் என இன்று பெல் நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டது என்று பெல் பாதுகாவலர்களை வைத்து புத்தர் சிலையை அகற்றினர். இதனால் புத்தசிலை வைத்த பெல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்