Skip to main content

விருத்தாசலம் அருகே மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
விருத்தாசலம் அருகே மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!



விருத்தாசலம் அருகே மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு மதுக்கடை அமைப்பதை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலம் அருகேயுள்ள முருகங்குடியில் அரசு மதுக்கடை இயங்கி வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது. அதையடுத்து அருகிலுள்ள வெண்கரும்பூர் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், வயல்வெளிகளுக்கும் செல்லும் வழித்தடத்தில் மதுக்கடைகள் திறப்பதால் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறும் அப்பகுதி மக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு மதுக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்