Published on 26/12/2018 | Edited on 26/12/2018

2019 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை நட்சத்திர விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை அறிவித்துள்ளது.
அதாவது நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை மற்றும் மது பார்கள் செயல்படக் கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாலை 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி. அதேபோல் மது அருந்தியவர்கள் வாகனங்கள் ஓட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ள காவல்துறை, மது அருந்தியவர்கள் கால்டாக்சி மூலம் அங்கிருந்து பாதுகாப்பாக வீடு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நட்சத்திர விடுதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.