தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
இந்நிலையில் தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடி வாசலுக்கு முன்பு தேங்காய் நார் கொட்டும் பணி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முறை 2,035 காளைகளும் 1735 மாடுபிடி வீரர்களும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். இதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெற்றது. ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.