
தேனியில் நிலப் பிரச்சனையில் பெண் ஒருவர் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் மாரியாயிபட்டி பகுதியில் வசித்து வருபவர் பழனியம்மாள் (52) கடந்த 48 ஆண்டுகளாக அதே ஊரில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய பழைய வீட்டை இடித்து புதுப்பித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பழனியம்மாளிடம் நிலம் தொடர்பாக தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த இடம் எனக்கு சொந்தமானது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டத் தொடங்கியுள்ளார். அப்பொழுது ஈஸ்வரன் மற்றும் அவருடைய சகோதரர் பால்ராஜ், பெருமாள்சாமி ஆகியோர் பழனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதோடு டிராக்டரை மேலே விட்டு ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ அடிப்படையில் ஈஸ்வரன், பால்ராஜ் ,பெருமாள் சாமி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.