Skip to main content

ஆர்.கே.நகர் போலி வாக்காளர்கள் நீக்கப்படாத விவகாரம்! - நாளை விசாரணை

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
ஆர்.கே.நகர் போலி வாக்காளர்கள் நீக்கப்படாத விவகாரம்! - நாளை விசாரணை

ஆர்.கே. நகர் தொகுதி 5 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்காததை எதிர்த்த  திமுகவின் வழக்கு வியாழன்று (டிசம்பர் 7) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும்வரை தேர்தல் நடத்தத் தடைகோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது  தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். 

இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நீக்கவில்லை எனக்கோரி  திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்காக தாக்கல்செய்ய அனுமதி அளித்தார். மேலும், வழக்கை வியாழன்று  வேறு அமர்வில் விசாரணைக்கு  பட்டியலிடுவதாகவும் தெரிவித்தார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்