Skip to main content

ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் மாயம்! - ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அதிரடி ஆய்வு!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
ig


திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் மாயமானதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிலைகள் மாயமாகி உள்ளன; பழமையான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சிலைதடுப்பு பரிவு, ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் 50 போலிசாருடன் உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். அதற்கு அடுத்த 1 மணிநேரம் கழித்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தனியே உள்ளே நுழைந்தார்.

சக்கரத்தாழ்வார், ஆயிரம்கால் மண்டபம், மூலவர், ஆகிய மூன்று இடங்களிலும் சோதனை நடத்தினார். விசாரணையின் போது புகார் கொடுத்த ரெங்கராஜ நரசிம்மன்னும், கோவில் ஆணையர் ஜெயராமன் உடன் அழைத்து விசாரணை நடத்தினார்.

ஸ்ரீரங்கம் கோவில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அன்னதானம் கொடுக்கும் மண்டபம் எல்லாம் எப்படி கட்டினீங்க, யார் அனுமதி கொடுத்தா என்று சிலை திருட்டை விசாரிக்க வந்தவர் இப்படி மாறி மாறி கேள்வி கேட்டு எல்லோரையும் திணரடித்து விட்டார்.

3 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த ஐஜி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றார். ஆனால் உடன் வந்த ஏடிஎஸ்பி ராஜாராம் பத்திரிகையாளர்களிடம் முதல்கட்டமாக 25 சதவீத ஆய்வும் விசாரணையும் முடிந்துள்ளது என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
 

ig


ஸ்ரீரங்கம் சிலை மாயம் குறித்து புகார் கொடுத்த ரெங்கராஜ நரசிம்மன்…

விசாரணை குறித்து புகார் கொடுத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் கொண்ட குழு நேற்று மதியம் 1:30 முதல் 4:30 வரை முதல் கட்ட விசாரணையை நடத்தினர். கோவிலின் பல பகுதிகளில் சென்று பார்வையிட்டு வாதி (நான்) பிரதிவாதி இருதரப்பு விளக்கங்களையும் கவனமாகவும் பொறுமையாகவும் விசாரித்தனர்.

பெரிய பெருமாள் (மூலவர்) திருமேனியில் தைல காப்பு சுற்றப்பட்டு இருப்பதால் பெருமாளின் திருவடி தரிசனம் இல்லை. மீண்டும் மற்றொரு நாள் இது நடக்கும்.

நம்பெருமாள், புருஷோத்தம பெருமாள், கதவுகள், கலசங்கள், ஆயிரம் கால் மண்டபம், அகழ்வாராய்ச்சி செய்த இடங்கள், கூரத்தாழ்வான் சன்னதி பின்னால் இடிக்கப்பட்ட மண்டபம், அழிக்கப்பட்ட சித்திரங்கள் எல்லாவற்றையும் முதல் கட்ட ஆய்வை நிகழ்த்தினர்.

செய்தவற்றிற்கு முறையாக அனுமதி உண்டா என்ற கேள்விகு ஜே.சி. இல்லை என்று ஒப்புக் கொண்டார். அதே போல கம்பத்தடி ஆஞ்சநேயரை மாற்றவோ, கோதண்ட ராமர் சன்னதி மாற்றவோ, கதவுகளை மாற்றவோ, கலசங்களை மாற்றவோ அனுமதி இல்லை என்று ஜே. சி யால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதே போல சக்கரத்தாழ்வர் சன்னதி முன்பு இருந்த சிங்க விளக்கு காணாமல் போனது என்று கோவிலில் வேலை செய்பவர்களே ஒத்துக்கொண்டனர். பல இடங்களில் கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டன.
 

ig


முதல் கட்ட ஆய்வில் நான் சொன்ன புகார்களில் பெருவாரியானவற்றை இன்று ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வின் நோக்கம் என் புகாரில் உண்மைத்தன்மை இருக்கின்றதா என்று பார்ப்தே. அதில் திருப்தி உண்டாகியதால் விரைவில் முதல் குற்றப்பத்திரிகை எப்.ஐ.ஆர். பதிவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

ஆய்வு முடித்தபோது ஊரில் இருப்பவர்கள் எவர் வேண்டுமானாலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி அலுவலகத்தில் வந்து பயமின்றி தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லலாம் என்றார் பொன் மாணிக்கவேல்.

இந்த நேரத்தில் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் பங்கு பாராட்டுக்குறியது என்பதை பதிவு செய்வது என் கடமையாகும். பலரும் தாமாகவே முன்வந்து கோவிலில் நடந்த விவரங்களை பொன் மாணிக்கவேல் குழுவினருக்கு விளக்கிச் சொன்னார்கள்.
 

ig


அவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் ஐ.ஜி. அவர்கள் கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு தைரியமும் சொன்னார். உங்களை எவராவது மிரட்டினால், என்னிடம் நேரில் வந்து உடனே சொல்லுங்கள். அப்படி செய்வது சட்டப்படி குற்றம். சாட்சிகளை அச்சுறுத்துவது எவராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் “டக் டக்” என்று விலக்கப்படுவார்கள் என்று தைரியமூட்டும் வண்ணம் சொன்னது அனைவரின் மதிப்பையும் அவர் மீது உயர்த்தியது.

யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தன் அலுவலகத்திற்கு வந்து தன்னைச் சந்தித்து விவரங்கள் கொடுக்கலாம் என்று சொன்னார்.

நேற்றைய விசாரணையின் போது வழக்கம் போல் கோயில் சிப்பந்திகள் என்னை உள்ளே விட மறுத்தனர். ஆனால் எ.டி.எஸ்.பி அவர்கள் அதை உடனுக்குடன் கவனித்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். இரண்டு பக்கமும் கேட்பதே நியாயம் என்பதை செயல் மூலம் நடத்திக் காட்டினார் என்றார்.

 

சார்ந்த செய்திகள்