Published on 05/05/2022 | Edited on 05/05/2022
![apartment children incident police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/FPd8gxeemifFRS18LEZIDQcvd2t4LXQeEpRHmacrlTg/1651725599/sites/default/files/inline-images/apartmen545.jpg)
அடுக்குமாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசித்து வருபவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வினிதா. இவரின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், இரண்டரை வயது தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்த சோபாவில் ஏறி ஜன்னலைத் திறந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது குழந்தை தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவலர்கள், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.