அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியை எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கட்டண தொகையே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 30ஆம் தேதி முதல் 6 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் அவர்களுடைய போராட்டத்தை 7வது நாளாக சிதம்பரம் காந்தி சிலை அருகே நடத்தினர். இதில் மாணவர்கள் போராட்டத்திற்கு செவிசாய்காத மாநில அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.
காளிதாஸ்