அனிதா தற்கொலை.. அரசுகளும் அமைச்சர்களுமே காரணம். புதுக்கோட்டையில் பேரணி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாணவி அனிதா போதிய மதிப்பெண் பெற்றும் நீட் என்ற கொடூர காரணத்தை மத்திய மாநில அரசுகள் மாணவ மாணவிகள் மீது ஏவிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதால் அனிதா மருத்துவர் கனவேடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
இது வரைஅடங்கி இருந்த தமிழகம் அனிதா மரணத்திற்கு பிறகு நேற்றுமுதல் கிளர்ந்து எழுந்துவிட்டது. ஊருக்கு ஊர் போராட்டம் வீதிக்கு வீதி ஆர்ப்பாட்டம் என்று கிளம்பிய மாணவர்களுக்கு துணையாகஅரசியல் கட்சிகளும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று டைஃபி சாலை மறியல் செய்தனர் நேற்று திமுக, தே.முதிக, சிபிஐ, விசி மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் பேரணி ஆர்ப்பாட்டங்களை நடத்தி மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநிலஅரசுகளும் அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
-இரா.பகத்சிங்