மாணவி அனிதா படித்த பள்ளியின் மாணவர்கள், கிராம மக்கள் நீட் தேர்வுக்கெதிராக உண்ணாவிரதம்!
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலின் அதிகாரத்திற்க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் அனிதா படித்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் கிராம மக்கள், அக்கிராமத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திரளான பொதுமக்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனர். இவர்கள் பள்ளி அருகே சாலையோரத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் மாலை வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
- எஸ்.பி.சேகர்