அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட மெரினா போராட்ட குழுவினர்!
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும் மெரினா இளைஞர் எழுச்சி அமைப்பினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். மத்திய அரசும், மாநில அரசுமே அனிதாவின் தற்கொலைக்கு காரணம். இனி ஒரு அனிதா உருவாகாமல் இருக்க, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம்.
அனிதாவின் தற்கொலை, தற்கொலை அல்ல! படுகொலை கல்விப் படுகொலை. உயிர் உன்னதமானது தான் ஆனால் அதை விட மாணவர்களின் உரிமை உன்னதமாது என்பதை நிரூபித்து விட்டாள் அனிதா. அனிதாவின் ஆன்மா சாந்தியடைய ஒரே வழி நீட் தேர்வை இரத்து செய்வதுதான் என கோஷம் எழுப்பினர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி வழங்க கோரியும் மெரினா போராட்ட குழுவினர் தலைமை செயலகத்தை இன்று காலை 11 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
படங்கள் - அசோக்குமார்.