Skip to main content

அனிதாவுக்கு நீதி கேட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
அனிதாவுக்கு நீதி கேட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை மாணவர்களும் அரியலூர் மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே போராட்டம் செய்தனர்.

பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து நுழைவு வாயிலை அடைத்து கொண்டு அனிதாவை கொன்ற நீட்டை கண்டித்தும், மாணவியின் மறைவுக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தில் நிரந்தரமாக நீட்டை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.

இதே போல் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்பை புறகனித்து போராட்டம் செய்தனர்.

- காளிதாஸ் 

சார்ந்த செய்திகள்