![ammk vetrivel passedaway.. ttv dhinakaran ,dmk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/njaYPmhs-OQNyvdTMsOzqTAOhrNyXGGwK957W4YFk1Y/1602772059/sites/default/files/inline-images/asgfsgsdgsgsgsgsgsgs.jpg)
சென்னையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார். கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். வெற்றிவேல் மறைவு அமமுகவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும். அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேபோல் ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மேயராக நான் இருந்த பொழுது மக்கள் பிரச்சினைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து தீர்வு கண்டவர் வெற்றிவேல் என அவரது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.