Skip to main content

அம்மா உணவகளில் கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்! (படங்கள்)

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் மே 03 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்கள் உணவங்கள் ஆன்லைன் ஆர்டர்களை மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கட்டிட தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட ஏழை மக்களையும், கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.  
 

சென்னை, பிரேசர் பால சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இலவச உனவை வாங்குவதற்காக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்