இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேறி, கே.கே. நகரில் கடந்த 11 ஆம் தேதி குடியேறினார்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய திட்டம் வருவதால் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் நோட்டீஸ் தரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் வெளியேறியதுபோல் நல்லக்கண்ணுவும் வெளியேறினார். இந்நிலையில் நல்லகண்ணு அவர்களுக்கு உடனே தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினருக்கும் வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.