Published on 31/07/2018 | Edited on 01/08/2018

காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கே சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் நலம் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கலைஞர். அவரின் நலம் விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், தமிழரசன், கனிமொழி ஆகியோரிடம் கலைஞரின் நலம் விசாரித்தேன். அவர்களுக்கு என் ஆறுதலைச்சொன்னேன். கலைஞர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவித்தார்.




