Skip to main content

'என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம்...'-பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி 

Published on 11/04/2025 | Edited on 11/04/2025
'All I expect...'- PMK Honorary President G.K. Mani Interview

'நான் இருக்கும் காலம் வரை நான் தான் பாமகவின் தலைவர்' என உறுதிபட ராமதாஸ் தெரிவித்திருக்கும் நிலையில் பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''ராமதாஸ் அவர்கள் நேற்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு சம்பந்தமாக பேசுவதற்கு இப்போது வந்திருக்கிறேன். நேற்றே பேசி இருக்க வேண்டும். நேற்று அறிவித்திருக்கிறார் கொஞ்சம் ஓய்வு எடுப்பார் என்று சொல்லிவிட்டு தான் இன்று பேச வந்திருக்கிறேன். 

இது சம்பந்தமாக ராமதாஸிடம் பேசப் போகிறேன். நீங்கள் கேட்கிற மாதிரி 45 வருடமாக நான் ராமதாசுடன் இருக்கிறேன். சங்கம் தொடங்குவதற்கு  முன்பிருந்தே சமூக நற்பணி மன்றம்; வன்னியர் சங்கம்; பாட்டாளி மக்கள் கட்சி என அனைத்திலும் பயணித்து வருகிறேன். என்னுடைய விருப்பம்; ஆசை; எதிர்பார்ப்பெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் நினைத்தது; இன்றும் நான் நினைப்பது ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்கி வருகிற காலத்தில் ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது சம்பந்தமாக தான் பேசப்போகிறேன்'' என்றார்.

சார்ந்த செய்திகள்